கரவெட்டி பங்கு மறையாசிரியர்கள் மற்றும் மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால யாத்திரை மாசி மாதம் 20ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை விஜின்ரஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறையாசிரியர்களும் மறைக்கல்வி மாணவர்களும் மாதகல் புனித லூர்து மாதா ஆலயத்தை தரிசித்து அங்கு நடைபெற்ற சிலுவைப்பாதை தியானத்தை தொடர்ந்து பண்டத்தரிப்பு பற்றிமா அன்னை ஆலயத்திற்கு சென்று நற்கருணை சந்திப்பு மேற்கொண்டு தொடர்ந்து மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயத்தை தரிசித்து அங்கு இடம்பெற்ற அருட்தந்தை றொக் பஸ்ரியன் அவர்களின் தியான உரையிலும் பங்குபற்றினர்.
இந்நிகழ்வில் 10 மறையாசிரியர்களும் 60 மறைக்கல்வி மாணவர்களும் அருட்சகோதரிகளும் பங்குபற்றியிருந்தனர்.

