திருப்பாலத்துவசபை தின சிறப்பு நிகழ்வு நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலயத்தில் மாசி மாதம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்பாலத்துவசபை ஊக்குவிப்பாளர் திரு றெக்னோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஸ்ரனி அன்ரனி அவர்களின் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து சிறார்களுக்கான திரைப்பட காட்சிப்படுத்தலும் நடைபெற்றன.
அன்றைய நாளை சிறப்பித்து மாலை சிறார்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் திருப்பாலத்துவ சபை தினத்தை முன்னிட்டு பங்கு மற்றும் அயற்பங்கு சிறார்களிடையே நடாத்தப்பட்ட ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி, இறைவார்த்தை மனன போட்டி, செப மனன போட்டி, தனிப்பாடல் போட்டி, ஆக்க போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் மற்றும் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன் நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலய பீடப்பணியாளர் தினமும் மாசி மாதம் 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பீடப்பணியாளர் பொறுப்பாளர் திரு. இக்னேசியஸ் கிளனி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்குத்தந்தை அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் கொழும்புத்துறை செபமாலை மாதா ஆலய பீடப்பணியாளர்களுடனான சந்திப்பும் பயிற்சி பாசறையும் இடம்பெற்றன.
பயிற்சி பாசறையில் திரு. இக்னேசியஸ் கிளனி மற்றும் திரு. றெக்னோ ஆகியோர் கலந்து கருத்துரை, விளையாட்டுக்கள், உதவு முறை பயிற்சி என்பவற்றின் ஊடாக பீடப்பணியாளர்களை நெறிப்படுத்தினர்.

