இளவாலை புனித யாகப்பர் ஆலய நிர்வாகத்தின் கீழ் இயங்கும் எழுச்சியகம் நிறுவன முன்பள்ளி மாணவர்களின் கால்கோள் விழா மற்றும் ஏடு தொடக்கல் நிகழ்வுகள் மாசி மாதம் 05ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றன.

பங்குத்தந்தையும் எழுச்சியக நிறுவன காப்பாளருமாகிய அருட்தந்தை அன்ரனி வின்சன் சில்வஸ்ரதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இளவாலை புனித யாகப்பர் ஆலயத்தில் வழிபாடும் தொர்ந்து ஆலய மண்டபத்தில் ஏடு தொடக்கல் நிகழ்வும், கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் முன்பள்ளி மாணவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin