நாவாந்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட திருப்பாலத்துவ சபை தின நிகழ்வு மாசி மாதம் 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை பொன்ராசா டினூசன் அவர்களின் உதவியுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் காலை புனித நீக்கிலார் ஆலயத்தில் யாழ். மறைமாவட்ட திருப்பாலத்துவ சபை இயக்குனர் அருட்தந்தை எயின்சிலி றொசான் அவர்களின் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து 70 பிள்ளைகளுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும் இடம்பெற்றன.
அத்துடன் அன்றைய நாளை சிறப்பித்து மாலை புனித பரலோக அன்னை ஆலயத்தில் கலைநிகழ்வுகளும் சிறார்களுக்கான ஒன்றுகூடலும் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் அருட்தந்தை எயின்சிலி றொசான் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

