கிளிநொச்சி கனகாம்பிகைகுள பிரதேசத்தில் அமலமரித்தியாகிகள் சபையினரால் நடாத்தப்படும் ‘அன்னை இல்லம்’ உளவளத்துணை நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் 30ஆம் ஆண்டு நிறைவு சிறப்பு கலந்துரையாடல் மாசி மாதம் 16ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.

இல்ல பொறுப்பாளர் அருட்தந்தை தயாநந்தன் பெரேரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வைத்தியர் திரு. விக்னேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்புரையாற்றியதுடன் உளநலனை பாதுகாக்க எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரி மற்றும் இல்ல பணியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin