தவக்கால பக்திமுயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கோடு யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தால் இவ்வருடமும் பசாம் மற்றும் பிழைதீர்க்கும் மந்திரம் பாடல் போட்டிகள் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அனைத்து வயதினரையும் உள்ளடக்கி நடைபெறவுள்ள இப்போட்டியில் பங்குபற்ற விரும்புபவர்கள் 4 நிமிடங்கள் உள்ளடங்கலாக 7 அல்லது 8ஆம் பிரசங்கங்கள் மற்றும் பிழைதீர்க்கும் மந்திரம் பாடும் போது கையடக்கத் தொலைபேசியில் வீடியோ பதிவுசெய்து 0741626719 என்ற இலக்க றூயவளயுpp செயலி ஊடாக மாசி மாதம் 23ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்ப வேண்டும்.

போட்டியாளர்களின் வீடியோக்கள் யாழ். மறை அலை தொலைக்காட்சியின் YouTube தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு நடுவர்களின் தீர்ப்போடு பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கேற்ப வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள்.

 

By admin