பாண்டியந்தாழ்வு புனித அன்னாள் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை நேசராஜா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 04ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 46 மாணவர்கள் உறுதிப்பூசுதல் அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.

அத்துடன் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெறவிருந்த பிள்ளைகளுக்கான பாசறை நிகழ்வு மாசி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறையாசிரியர்களின் உதவியுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் திரு. போல் மற்றும் ஆசிரியர் அனுஸ்ரதாஸ் ஆகியோர் வளவாளர்களாக கலந்து விளையாட்டுக்கள், குழுச்செயற்பாடுகள், கருத்துரைகள் என்பவற்றின் ஊடாக மாணவர்களை நெறிப்படுத்தினர்.

By admin