செம்மணி மனித புதைகுழிக்கு நீதி வேண்டியும் பாதிக்கப்பட்ட மக்களுடன் தமது உடனிருப்பை வெளிப்படுத்தியும் இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றமும் யாழ். கிறிஸ்தவ ஒன்றியமும் இணைந்து முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டம் ஐப்பசி மாதம் 30ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை செம்மணி பகுதியில் நடைபெற்றது.
மன்ற தலைவர் பேராயர் நிஸாந்த பெர்னான்டோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சித்துப்பாத்தி இந்து மயான வாயிலில் சிறப்பு வழிபாட்டுடன் ஆரம்பமாகிய இப்போராட்டம் பேரணியாக செம்மணி சந்தியை சென்றடைந்தது. தொடர்ந்து, அங்கு அணையா விளக்கு தூபியில் மலரஞ்சலி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டத்தில் 12 திரு அவைகளின் தலைவர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

