மன்னார் மறைமாவட்டம் பேசாலை புனித வெற்றிநாயகி அன்னை ஆலய இறைமக்களின் புனித அருளானந்தர் ஈரிரவு நாடகம் புரட்டாதி மாதம் 25,26ஆம் திகதிகளில் மன்னார் புனித பற்றிமா மத்திய மகாவித்தியாலய விளையாட்டரங்கில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை சத்தியராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அரங்கிலும் அரங்கப் பின்னணியிலும் 100 வரையான கலைஞர்களின் பங்குபற்றுதலோடு இந்நாடகம் மேடையேற்றப்பட்டது.
நாடக நிறைவில் மங்கள திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ, குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.
பேசாலையின் குருசுப்புலவர் என அழைக்கப்படும் அமரர் அவுறான் செபஸ்தியான் குருஸ் அவர்களால் 1962ஆம் ஆண்டு எழுதி மேடையேற்றப்பட்ட “புனித அருளானந்தர்” ஈரிரவு நாடகம் 36 வருடங்களின் பின்னர் ஐந்தாவது தடவை மீண்டும் பேசாலைப் பங்கில் இளம் கலைஞர்களின் ஒந்துழைப்புடன் மேடையேற்றப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

