சுவிஸ் நாட்டில் வசிக்கும் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளரும் கலாச்சார ஒருங்கிணைப்பாளருமான திரு. வின்ஸ்லோஸ் அன்ரனி அவர்களின் ‘வேரிழந்த வாழ்க்கையும் தமிழர் பாதையும்’ நூல் அறிமுக நிகழ்வு, செப்ரெம்பர் மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் சூரிச் நகரில் நடைபெற்றது.
தகைசால் தமிழ்ப் பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜப்பான் கச்சுயின் பல்கலைக்கழக முன்னாள் ஆய்வுப் பேராசிரியர் முனைவர் மனோண்மணி சண்முகதாஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து அறிமுக உரையை வழங்கினார்.
இந்நிகழ்வில் மதகுருமார், சுவிஸ்வாழ் தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இந்நூல் புலம்பெயர் தமிழர்களின் வாழ்வியல் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய விடயங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.

