மன்னார் மறைமாவட்ட மடுமாதா சிறிய குடுமட திருவிழா குருமட அதிபர் அருட்தந்தை பிரான்சிஸ் மரிடிகோல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

திருப்பலி நிறைவில் கலைநிகழ்வுகளும் தொடர்ந்து மாலை குருமட மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்களுக்கிடையிலான உதைப்பந்தாட்ட போட்டியும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், நலன்விரும்பிகளென பலரும் கலந்துகொண்டனர்.

By admin