தீவகம், அனலைதீவு புனித வேளாங்கன்னி அன்னை ஆலய திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பொன்ராசா டினூஸன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.
செம்டெம்பர் மாதம் 28ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் வழிபாடுகள் ஆரம்பமாகி ஒக்டோபர் மாதம் 06ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை தீவக மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை மானிப்பாய் பங்குத்தந்தை அருட்தந்தை பரமதாஸ் பத்திநாதன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

