மானிப்பாய் சென் ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலையில் பணியாற்றி இறைபதமடைந்த அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், மாணவர்களை நினைவுகூர்ந்து ஒப்புக்கொடுக்கப்பட்ட திருப்பலி நவம்பர் மாதம் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மானிப்பாய் புனித அன்னாள் ஆலயத்தில் இடம்பெற்ற திருப்பலியை மானிப்பாய் பங்குத்தந்தையும் பாடசாலையின் அன்மீக குருவுமாகிய அருட்தந்தை பரமதாஸ் பத்திநாதன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
அத்துடன் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட தீபாவளி தின சிறப்பு நிகழ்வு நவம்பர் மாதம் 10ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆசிரியர் திருமதி. வாசுகி ஜெயக்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அதிபர் அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் இறைவணக்கத்துடன் தீபங்கள் ஏற்றப்பட்டன.
தொடர்ந்து பேச்சு, பாடல், கவிதை, நடனம், சிறுவர் நாடகம் போன்ற கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

