நெடுந்தீவு பங்கின் புனித வின்சன்ட் டி போல் பந்தியில் பணியாற்றி இறைபதமடைந்த உறுப்பினர்களை நினைவுகூர்ந்து ஒப்புக்கொடுக்கப்பட்ட திருப்பலி பங்குத்தந்தை அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நவம்பர் மாதம் 07ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

நெடுந்தீவு புனித மரியன்னை ஆலயத்தில் இடம்பெற்ற திருப்பலியை அருட்தந்தை சோபன் றூபஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததுடன் அருட்சகோதரிகள், புனித வின்சன்ட் டி போல் சபை அங்கத்தவர்கள் மற்றும் இறைமக்கள் இத்திருப்பலியில் கலந்து செபித்தனர்.

By admin