மானிப்பாய் அருணோதயா முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு போட்டி ஆடி மாதம் 05ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மானிப்பாய் புனித அன்னாள் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
முன்பள்ளி ஆசிரியர்கள் திருமதி கலிஸ்ரா சுபானந்தன் மற்றும் திருமதி அன்ரனீத்தா பாமினி கொலின் அஞ்சலோ ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் முன்பள்ளி முகாமைத்துவக் குழு தலைவர் அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறார்களின் மைதான விளையாட்டுகளுடன் வினோத உடை போட்டி, இசையும் அசைவும், பெற்றோருக்கான விளையாட்டுக்கள் மற்றும் பரிசளிப்பும் இடம்பெற்றன.
மைதான விளையாட்டுக்களில் சிறார்களின் கோபுரம் அமைத்தல், நீர் நிரப்புதல், வட்ட அஞ்சல், இசையில் நனைந்து பிராணிகள் உணவு சேகரித்தல், பூப்பறித்தல், சுரங்க அஞ்சல், சமநிலை, என்பவற்றடன் அன்னையர்களுக்கான சங்கீத கதிரை, தந்தையர்களுக்கான பந்துப்பரிமாற்றம், பழைய மாணவர்களுக்கான வேகநடை என்பனவும் இடம்பெற்றன.
முன்பள்ளி பழைய மாணவியும் யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியருமான பெனிற்றா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்சகோதரிகள், பெற்றோரென பலரும் கலந்துகொண்டனர்.

