யாழ்ப்பாணம் புனித மடுத்தீனார் சிறிய குருமடத்திலிருந்து களுத்துறை தஹம் செஹன திரு இருதய ஆண்டவர் இடைநிலைக் குருத்துவக் கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கான பிரியாவிடை புரட்டாதி மாதம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அங்கு இடம்பெற்றது.

குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரும்பிராய் பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்கள் தலைமைதாங்கி திருப்பலியை ஒப்புக்கொடுத்தார். திருப்பலி நிறைவில் கலைநிகழ்வுகளும், புனரமைக்கப்பட்ட சமையலறை, உணவு களஞ்சிய அறை மற்றும் குருமடப் பணியாளர் தங்குமிடம் ஆகியவற்றை ஆசீர்வதித்து திறந்துவைக்கும் நிகழ்வும் இடம்பெற்றன. மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்கள் இவற்றை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், குருமட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

By admin