புதுக்குடியிருப்பு பங்கின் கலை பண்பாட்டுக் கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச பண்பாட்டுப் பெருவிழா பண்பாட்டு ஊர்த்திப் போட்டி புரட்டாதி மாதம் 01ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்போட்டியில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்த 20 அணிகள் பங்குபற்றியதுடன் புதுக்குடியிருப்பு பங்கு முதலாமிடத்தையும் பெற்றுக்கொண்டது.
புதுக்குடியிருப்பு பங்குமக்களால் திருமுழுக்கு யோவானின் சாட்சிய மரணத்தை சித்தரிக்கும் ‘நீதிக்காக தலைகொடுத்த ஜோவானின் மரணம்’ எனும் தலைப்பில் ஊர்தி உருவாக்கப்பட்டிருந்தது.

