தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல வருடாந்த திருவிழா திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 26ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

17ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை குருமுதல்வர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழா திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

By admin