சன.13.புனித யோசே வாஸ் ஆண்டு நிறைவு தின ஆரம்ப நிகழ்வுகள் 13.01.2018 இன்று சனிகிழமை காலை 10.30 மணிக்குஇ சில்லாலை புனித கதிரைமாதா ஆலயத்தில் ஆரம்பமானது. இன் நிகழ்வில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜோசெப்தாஸ் ஜெபரட்ணம் ஆசிஉரை வழங்கி புனித யோசே வாசின் வாழ்கை வரலாற்றை சித்தரிக்கும் கண்காட்சியை நாடவை வெட்டி ஆரம்பித்து வைத்தார். இந் நிகழ்வில் அதிகமான மறைமாவட்டக் குருக்களும்ää மறைமாவட்டத்தில் பணியாற்றும் அருட்சகோதரிகளும் நூற்றுக்கணக்கான இறைமக்களும் கலந்துகொண்டனர்.









