அருட்திரு ஞா. வி. பிலேந்திரன் அடிகளார் வாழ்நாள் பேராசிரியர்

யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் பணியாற்றிவரும் அருட்திரு ஞா. வி. பிலேந்திரன் அவர்கள் வாழ்நாள் பேராசிரியராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தால் நியமனம் பெற்றுள்ளார்.

அர்ப்பணிப்புள்ள, முன்மாதிரிகையான குருக்களாகப் பணியாற்றுங்கள்

யாழ் மறைமாவட்டக் குருக்கள் ஒன்றியத்தின் பாதுகாவலரான புனித. யோண் மரிய வியன்னியின் திருநாள் 24-09-2020 வியாழனன்று யாழ் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் காலை 9.30 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. இத்திருப்பலியைத் தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்து மறையுரையாற்றிய ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்கள் குருக்கள் புனித யோண் மரிய வியன்னியைப் போன்று அர்ப்பணிப்புள்ள, முன்மாதிரிகையான குருக்களாகப் பணியாற்றவேண்டுமென அறிவுறுத்தினார்.

Continue reading அர்ப்பணிப்புள்ள, முன்மாதிரிகையான குருக்களாகப் பணியாற்றுங்கள்

200 ஆண்டு நிறைவு நாள்

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை உருவாக்கப்பட்ட 200 ஆண்டு நிறைவு நாள் நிகழ்வு 19.09.2020 சனிக்கிழமை மன்னார் மடுத்திருத்தலத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மதியம் 12.00 மணியளவில் மடுத்திருத்தலத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

Continue reading 200 ஆண்டு நிறைவு நாள்

புதுக்குடியிருப்பு பங்கு இளையோரின் எடுதுக்காட்டான முயற்சி

தேசிய இளையோர் தினத்தில் புதுக்குடியிருப்பு பங்கு இளையோரின் முயற்சியால் புது குடியிருப்பு பிரதேசத்தில் வாழ்ந்து வரும் ஒரு வறிய குடும்பத்திற்கு தற்காலிக வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இளையோரின் இம்முயற்ச்சி அப்பிரதேசத்தில் பலரது பாராட்டையும் பெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Continue reading புதுக்குடியிருப்பு பங்கு இளையோரின் எடுதுக்காட்டான முயற்சி

‘நாடகக் கீர்த்தி’ விருது மரிய சேவியர் அடிகளாருக்கு

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கைக் கலைக்கழகம், அரச நாடக ஆலோசனைக்குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில் 11.09.2020 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கொழும்பு, தாமரைத் தடாக அரங்கில் நடைபெற்ற அரச நாடாக விழாவில் அரச உயர் விருதுகளில் ஒன்றான ‘நாடகக் கீர்த்தி’ விருது திருமறைக் கலாமன்ற இயக்குநர் அருட்கலாநிதி மரிய சேவியர் அடிகளாருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்ட து.

Continue reading ‘நாடகக் கீர்த்தி’ விருது மரிய சேவியர் அடிகளாருக்கு

புதுப் பொலிவுடன் பரந்தன் பங்குப் பணிமனை

பரந்தன் புனித அந்தோனியார் ஆலய பங்குப் பணிமனை புனரமைப்பு செய்யப்பட்டு 03.09.2020 வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் ஆசிர்வதித்து திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆலய வளாகத்தின் நுழைவாயில் அமைக்கப்பட்ட புனித அந்தோனியார் சுருபமும் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு பங்குத்தந்தை அருட்திரு சகாயநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

Continue reading புதுப் பொலிவுடன் பரந்தன் பங்குப் பணிமனை

புனித மரியன்னை பேராலயத்தில் புது பொலிவுடன் நற்கருணை சிற்றாலயம்

08.07.2020 புதன்கிழமை மாலை 5. 30 மணியளவில் யாழ்.மறைமாவட்டத்தில் அமைந்துள்ள புனித மரியன்னை பேராலயத்தில் அழகிய தோற்றத்துடன் புனரமைக்கப்பட்டுவந்த நற்கருணைச் சிற்றாலயம் யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களால் ஆசீர்வதித்து திறந்துவைக்கப்பட்டது.

Continue reading புனித மரியன்னை பேராலயத்தில் புது பொலிவுடன் நற்கருணை சிற்றாலயம்

யாழ். மறை மாவட்டத்தின் முதலாவது அப்போஸ்தலிக்க விக்கார் ஆயர் ஒறாசியோ பெற்றக்கினி

27.06.2020 சனிக்கிழமை மதியம் 12.00 மணிக்கு யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல வளாகத்தில் அமைக்கப்பட்ட யாழ். மறை மாவட்டத்தின் முதலாவது அப்போஸ்தலிக்க விக்கார் ஆயர் ஒறாசியோ பெற்றக்கினி அவர்களின் உருவச்சிலை மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேர்ணட் ஞானப்பிரகாசம் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.

Continue reading யாழ். மறை மாவட்டத்தின் முதலாவது அப்போஸ்தலிக்க விக்கார் ஆயர் ஒறாசியோ பெற்றக்கினி

யாழ். மறைமாவட்டத்தில் நான்கு புதிய குருக்கள்

யாழ். மறைவட்டத்தை சேர்ந்த நான்கு திருத்தொண்டர்கள் இன்று 27.06.2020 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு புனித மரியன்னை பேராலயத்தில் ஆயர் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டார்கள். திருத்தொண்டர்களான அலிஸ்ரன் நியூமன், ஜோன் குருஸ், நிதர்சன், எட்வின் நரேஸ் ஆகியோரே யாழ் மறைமாவட்ட புதிய குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டவர்களாவார்.

Continue reading யாழ். மறைமாவட்டத்தில் நான்கு புதிய குருக்கள்

கூழாமுறிப்பு பங்கில் புதிய பங்கு பணிமனை

முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள கூழாமுறிப்பு பங்கில் புதிதாக அமைக்கப்பட்ட பங்குப் பணிமனை இன்று (19. 06. 2020) யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையினால் ஆசீர்வதித்து திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வினை பங்குத்தந்தை அருட்திரு. நிக்சன் கொலின்ஸ் தலைமை தாங்கி நடாத்தினார்.

Continue reading கூழாமுறிப்பு பங்கில் புதிய பங்கு பணிமனை