புனித வின்சென்ற் டி போல் திருவிழா

புனித வின்சென்ற் டி போல் திருவிழா 27.09.2021 கடந்த திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு புனித வின்சென்ற் டி போல் தேசிய சபை ஆன்ம இயக்குனரின் வழிகாட்டுதலுக்கு அமைவாக அன்றைய தினம் மாலை 7.00மணியிலிருந்து 7.30மணிவரை இலங்கையிலுள்ள அனைத்து வின்சென்தியர்களும் ஒன்றாக இணைந்து ஆன்மீகப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். கொடிய தொற்று நோயிலிருந்து மக்கள் அனைவரும் விடுபடவும், அருளாளர் பிரெற்றிக் ஓசானம் அவர்கள் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படவும், ஆயுதத் தாக்குதலால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கவும் வின்சென்தியர்களின் பணிகள் சிறப்புற அமைய வேண்டியும் இவ் ஆன்மீகப் பிரார்த்தனை நடைபெற்றது.

Continue reading புனித வின்சென்ற் டி போல் திருவிழா

கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தினால் உணவுப்பொதிகள்

கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தினால் கிளிநொச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி, கண்டாவளை ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளிலும், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுகளிலுமுள்ள விசேட தேவையுடையோரின் மேம்பாட்டிற்கென சமூகம் சார் நிகழ்ச்சி திட்டத்தினை கடந்த வருடம் யூன் மாதம் முதல் முன்னெடுத்து வருகின்றது. இந்நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக தெரிவுசெய்யப்பட்ட 162 விசேட தேவையுடைய பிள்ளைகளின் குடும்பங்களுக்கு இந்நிறுவனம், அனைத்துலக மருத்துவநல அமைப்பின் அணுசரனையுடன் ரூபா 2,000.00 பெறுமதியான உணவுப்பொதிகளை 29ஆம் திகதி கடந்த புதன்கிழமை வழங்கிவைத்துள்ளது.

Continue reading கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தினால் உணவுப்பொதிகள்

கா.போ.தா சாதாரண தர பரீட்சை பெறுபோறுகள்

கா.போ.தா சாதாரண தர பரீட்சை பெறுபோறுகள் கடந்த வியாழக்கிழமை வெளிவந்துள்ள நிலையில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் பரிட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 94 வீதமானவர்கள் சித்தியடைந்து சிறப்பான பெறுபேறுகளை பெற்றுள்ளனர். இவர்களில் மூவர் ஒன்பது பாடங்களிலும் ஐவர் சங்கீதபாடம் தவிர்து எட்டுப்பாடங்களிலும் இருவர் ஏழு பாடங்களிலும் அறுவர் ஐந்து பாடங்களிலும் அதிதிறமை சித்திகளை பெற்றுள்ளனர்.

Continue reading கா.போ.தா சாதாரண தர பரீட்சை பெறுபோறுகள்

எம்மைச் சூழ்ந்துள்ள தீமைகள் அகன்றுபோக இலங்கை ஆயர் பேரவையின் ஏற்பாட்டில் திருச்செபமாலை திருயாத்திரை

எம்மைச் சூழ்ந்துள்ள தீமைகள் அகன்றுபோக மரிஅன்னையின் பரிந்துரையை மன்றாடி, இலங்கை ஆயர் பேரவை, மரியன்னையின் மாதமாகிய ஒக்ரோபர் மாதத்தில், நாடளாவிய மெய்நிகர் வழியிலான திருச்செபமாலை திருயாத்திரையை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. ஒக்ரோபர் மாதம் 2ம் திகதி காலி மறைமாவட்டத்திலுள்ள மாத்தறை மாதா திருத்தலத்தில் ஆரம்பமாகும் இத்திருயாத்திரை, 30ம் திகதி மன்னார் மருதமடுத்திருப்பதியில் நடைபெறும் இறுதிச் திருச்செபமாலைத் தியானத் தொடர்ந்து, ஒக்ரோபர் 31ம் திகதி அனைத்து மறைமாவட்டங்களிலும் ஒப்புக்கொடுக்கப்படும் சிறப்புத் திருப்பலிகளோடு நிறைவுபெறும்.

Continue reading எம்மைச் சூழ்ந்துள்ள தீமைகள் அகன்றுபோக இலங்கை ஆயர் பேரவையின் ஏற்பாட்டில் திருச்செபமாலை திருயாத்திரை

சுவிட்சலாந்து தூதரக அலுவலகத்தை யாழில் மீண்டும் திறக்க கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்து பின்னர் தற்காலிகமாக மூடப்பட்ட சுவிட்சலாந்து தூதரக அலுவலகத்தை மீண்டும் திறக்க ஆவன செய்யுங்கள் என்று இலங்கையின் சுவிட்சலாந்து தூதரிடம் வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் மன்னார் மறைமாவட்டங்களின் ஆயரகள் கையொப்பமிட்டு இலங்கையின் சுவிட்சலாந்து தூதருக்கு அனுப்பிய கடிதத்தில் மேற்படி வேண்டுகொள் விடுக்கப்பட்டுள்ளது.யுத்தம் முடிவுக்கு வந்து பன்னிரண்டு ஆண்டுகள் நிறைவுற்றபோதும் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கவேண்டியுள்ள வடக்கு-கிழக்கு பிரதேசத்தில் சர்வதேச நிறுவனங்கள், மனித உரிமை கண்காணிப்பாளர்கள், இராஐதந்திர அதிகாரிகளின் பிரசன்னம் மிகவும் அவசியமாக இருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் சுவிட்சலாந்து தூதரகத்தினுடைய அலுவலகத்தின் பிரசன்னம் மிகவும் முக்கியமானது என்பதை ஆயர் மன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.

Continue reading சுவிட்சலாந்து தூதரக அலுவலகத்தை யாழில் மீண்டும் திறக்க கோரிக்கை

‘கலைமுகம்’ கலை இலக்கிய சமூக இதழ்

திருமறைக் கலாமன்றத்தால் வெளியிடப்படும் ‘கலைமுகம்’ கலை இலக்கிய சமூக இதழின் ஏப்பிரல் – செப்ரெம்பர் 2021 காலப்பகுதிக்குரிய 72 ஆவது இதழ் வெளிவந்துள்ளது. திருமறைக் கலாமன்றத்தின் ஸ்தாபக இயக்குநராகவும், ‘கலைமுகம்” இதழின் பிரதம ஆசிரியராகவும் இருந்து கடந்த ஏப்பிரல் அமரத்துவமடைந்த கலைத்தூது நீ.மரிய சேவியர் அடிகளாரின் நினைவுகளின் சில பக்கங்களைச் சுமந்து வந்துள்ள இந்த இதழில், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நூல் மதிப்பீடுகள், அஞ்சலிகள் போன்ற பல்வேறு விடயங்களும் இடம்பெற்றுள்ளன. கலைமுகம் இதழ் கடந்த 32 ஆண்டுகளாக தெடர்ச்சியாக திருமறைக் கலாமன்றத்தால் வெளியிடப்பட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் குழுமத்தின் – புதிய குருக்கள்

யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் குழுமத்தின் மூன்று திருத்தொண்டர்கள் 11.09.2021 சனிக்கிழமை அன்று புதிய குருக்களாக யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிராகாசம் அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டார்கள்.

யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல சிற்றாலயத்தில் கோவிட் – 19 சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக ஆயர் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தால் திருச்சடங்கு திருப்பலியில் தியாக்கோன்களான யேசுதாசன் அமிர்தராஜ், பிரான்சிஸ் மனோகரன் பிரகாஸ் நிஜந்தன், வெலிச்சோர் வொலன்ரைன் மொறிஸ் ஆகியோர் குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டார்கள். இப்புதிய அருட்பணியாளர்கள் இறை யேசு வழியில் நல் மேய்ப்பர்களாக பணியாற்ற வாழ்த்துக்களை தொரிவித்துக்கொள்கின்றோம்.

Continue reading யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் குழுமத்தின் – புதிய குருக்கள்