சமகால கிறிஸ்தவ சிந்தனைகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறையின் ஏற்பாட்டில் சமகால கிறிஸ்தவ சிந்தனைகள் என்ற தலைப்பில் நடைபெறும் மெய்நிகர் வழியிலான விரிவுரைத்தொடரின் 20வது தொடர் 12ம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

அருட்திரு மேரி பஸ்ரியன் அவர்களின் நினைவுநாள்

மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள வங்காலை புனித அன்னாள் ஆலயத்தில் வைத்து இலங்கை அரச படையினரால் 1985ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட அருட்திரு மேரி பஸ்ரியன் அவர்களின் நினைவுநாள் 6ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை பல இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதிகளுக்கான வருடாந்த கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வு

யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதிகளுக்கான வருடாந்த கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வு 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். சிறைச்சாலையில் சிறைச்சாலை ஆன்மீகக் குருவும் புனித பத்திரிசியார் கல்லூரி அதிபருமான அருட்திரு திருமகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

முல்லைத்தீவு ஒதியமலை கிராம மக்களுக்கான ஒரு தொகுதி உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு

கனடா மொன்றியல் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகமான மீட்பின் அன்னை மறைத்தளத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமமாகிய ஒதியமலை கிராம மக்களுக்கான ஒரு தொகுதி உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு கடந்தமாதம் 26ஆம் திகதி ஒதியமலை கிராமத்தில் நடைபெற்றது.