மகாஞான ஒடுக்கத்திற்கான முன்னாயத்த கூட்டம்
நெடுந்தீவு பங்கில் எதிர்வரும் 20 திகதி தொடக்கம் மார்ச் மாதம் 20 திகதி வரை நடைபெறவுள்ள மகாஞான ஒடுக்கத்திற்கான முன்னாயத்த கூட்டம் 09ஆம் திகதி கடந்த புதன்கிழமை நெடுந்தீவு புனித யுவானியார் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
நல்லிணக்கபுரம் கிராமத்தில் அமையப்பெறவுள்ள ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
குழமங்கால் பங்கு எல்லைக்குட்பட்ட மாவட்டபுரம் கீரிமலை வீதியில் அமைந்துள்ள நல்லிணக்கபுரம் கிராமத்தில் அமையப்பெறவுள்ள ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 15ம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை பங்குத்தந்தை அருட்திரு பாஸ்கரன் அவர்களின் தலைமையில் அங்கு நடைபெற்றது.
175 ஆண்டுகளை நிறைவு செய்யும் அமலமரித் தியாகிகள் சபையினர்
இலங்கை திருஅவையில் பணியாற்றி தமது 175 ஆண்டுகளை நிறைவு செய்யும் அமலமரித் தியாகிகள் சபையினர் இவ்வாண்டை சிறப்பிக்கும் பல நிகழ்வுகளை முன்னெடுத்துள் நிலையில் இதன் ஆரம்ப நிகழ்வுகள் 14ம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ்இ கொழும்புதுறையில் நடைபெற்றது.
மாதகல் புனித லூர்து அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா
இளவாலை மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள மாதகல் புனித லூர்து அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா 13ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றது.
சின்னத்தீவு புனித செபஸ்ரியார் ஆலய திருவிழா
இரணைத்தீவில் அமைந்துள்ள சின்னத்தீவு புனித செபஸ்ரியார் ஆலய திருவிழா கடந்த மாதம் 28ஆம் 29 ஆம் திகதிகளில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.