தவக்கால தியானம் அல்லைப்பிட்டிபங்கு
தீவக மறைக்கோட்டத்திற்குட்பட்ட அல்லைப்பிட்டிப் பங்கின் மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால தியானம் 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அல்லைப்பிட்டி புனித யுவானியார் ஆலயத்தில் இடம்பெற்றது.
பொது நிலையினர் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு
முல்லைத்தீவு மறைக்கோட்ட பொது நிலையினர் கழக செயற்குழு உறுப்பினர்களுக்கும் தர்மபுரம் பங்கின் பொது நிலையினர் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை தர்மபுரம் புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது.
தவக்கால யாத்திரை மல்வம் பங்கு
மல்வம் பங்கு இளையோர்களால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால யாத்திரை 26ஆம் திகதி கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.
தலைமைத்துவக் கருத்தரங்கு
முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தை சேர்ந்த இளையோர்களுக்கான தலைமைத்துவக் கருத்தரங்கு 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு இடம்பெற்றது.
தவக்காலத் தியானம் பரந்தன் பங்கு
பரந்தன் புனித அந்தோனியார் ஆலயத்தில் நான்கு நாட்கள் முன்னெடுக்கப்பட்ட தவக்காலத் தியானம் கடந்த வாரம் அங்கு நடைபெற்றது.