JAFFNA DIOCESE CATHOLIC NEWS – YARL MARAI ALAI TV 31.12.2021
https://youtu.be/9w7id6BtMPM
யூபிலி ஆண்டு நிறைவு
போர்தோவின் திருக்குடும்ப சபையின் யாழ் மாகாணத்தைச் சேர்ந்த 23 அருட்சகோதரிகள் தங்களது துறவற வார்த்தைப்பாட்டின் 70வது 60வது மற்றும் 25வது வருட யூபிலி ஆண்டு நிறைவை 19ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினார்கள்.
கிறிஸ்து பிறப்பு விழா கரோல் வழிபாடு
யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலய அன்பியங்களால் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்து பிறப்பு விழா கரோல் வழிபாடு 18ம் திகதி கடந்த சனிக்கிழமை பேராலயத்தில் நடைபெற்றது
யாழ்ப்பாணம் புனித மடுத்தினார் சிறிய குருமடத்தில் கிறிஸ்து பிறப்பு விழா
யாழ்ப்பாணம் புனித மடுத்தினார் சிறிய குருமடத்தில் கிறிஸ்து பிறப்பு விழா நிகழ்வு 22ஆம் திகதி கடந்த புதன்கிழமை குருமட அதிபர் அருட்திரு ஜெயறஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
(First Aid) உயிர்க்காப்பு தொடர்பான செயலமர்வு
இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் நெறிப்படுத்தலில் அமெரிக்கன் கோணர் நிலையத்தின் (American Corner) யாழ் கிளையின் ஊடாக நடாத்தப்பட்ட (First Aid) உயிர்க்காப்பு தொடர்பான செயலமர்வில் புனித பத்திரிசியார் கல்லூரியை சேர்ந்த 15 மாணவர்கள் கலந்து பயிற்சிகளை பெற்றனர்.