இறந்த விசுவாசிகளை நினைவுகூர்ந்து சிறப்பு திருப்பலி
இறந்த விசுவாசிகளை நினைவுகூர்ந்து செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலய சேமக்காலையில் 2ம் திகதி கடந்த வியாழக்கிழமை திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன் அவர்கள் திருப்பலியை தலைமைதாங்கி நிறைவேற்றினார். திருப்பலி நிறைவில் கல்லறைகள் ஆசீர்வதிக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
செபமாலைக் கன்னியர் ஆழ்நிலை தியான துறவற சபையினரின் மேல்மட்ட கூட்டத்தொடர்
மரியன்னையை மாதிரியாகக் கொண்ட வாழ்வே செபமாலைக் கன்னியர்களின் அழைப்பு என செபமாலைக் கன்னியர் ஆழ்நிலை தியான துறவற சபையினரின் மேல்மட்ட கூட்டத்தொடரில் கலந்து கொண்ட யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தெரிவித்துள்ளார். அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை…
கிறிஸ்தவ கற்கைநெறிகள் முதுமானி பட்டப்படிப்புக்கான இரண்டாவது அணியின் கல்வி ஆண்டு ஆரம்ப நிகழ்வு
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தின் ஏற்பாட்டில் கிறிஸ்தவ நாகரிகத்துறையின் அனுசரணையில் முன்னெடுக்கபட்டுவரும் கிறிஸ்தவ கற்கைநெறிகள் முதுமானி பட்டப்படிப்புக்கான இரண்டாவது அணியின் கல்வி ஆண்டு ஆரம்ப நிகழ்வு 28ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புக்கள் பீடத்தில் இக்கற்கைநெறியின் இணைப்பாளரும்…
யாழ்.மறைக்கோட்டத்தில் திருவழிபாட்டு கருத்தமர்வு
யாழ்ப்பாண மறைக்கோட்ட பங்குகளை இணைத்து முன்னெடுக்கப்பட்ட திருவழிபாட்டு கருத்தமர்வு 28ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலய மண்டபத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட திருவழிபாட்டு ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை தயாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் “திருப்பலியின் மறைபொருள்”…
‘போர்த்துக்கேயரின் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் கத்தோலிக்கம்’ நூல் வெளியீடு
அருட்தந்தை ஞானமுத்து பிலேந்திரன் அவர்களால் எழுதப்பட்ட ‘போர்த்துக்கேயரின் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் கத்தோலிக்கம்’ என்னும் நூல் வெளியீட்டு நிகழ்வு 21ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மறைக்கல்வி நடுநிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட கிளறேசியன் சபை பிராந்திய முதல்வர் அருட்தந்தை…
