குடும்ப விழா -மானிப்பாய் புனித அன்னம்மாள் ஆலயம்

மானிப்பாய் பங்கில் அமைந்துள்ள புனித அன்னம்மாள் ஆலயத்தில் அவ்வாலயத்தை சேர்ந்த அனைத்துக் குடும்பங்களையும் ஒன்றிணைத்த குடும்ப விழா 20ஆம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு கொண்டாடப்பட்டது.

புதிய அலுவலகமும் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையமும் திறந்து வைப்பு

கிளிநொச்சி பிரதேசத்தில் அமைந்துள்ள கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்திற்கான புதிய அலுவலகமும் அங்கு அமைக்கப்பட்டுவந்த தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையமும் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களினால் 18ஆம் திகதி சனிக்கிமை அன்று ஆசிர்வதித்து திறந்து வைக்கப்பட்டது.

முன்நாள் மறையாசிரியர்களை கௌரவிக்கும் சேவைநலன் பாராட்டுவிழா

இளவாலை மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள மாரீசன்கூடல் பங்கில் முன்நாள் மறையாசிரியர்களை கௌரவிக்கும் சேவைநலன் பாராட்டுவிழா 16ஆம் திகதி கடந்த புதன்கிழமை சேந்தாங்குளம் கடற்ரையில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.

மாணவர் விடுதியின் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள மாணவர் விடுதியின் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா கல்லூரி அதிபர் அருட்திரு திருமகன் அவர்கள் தலைமையில் 15ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.