கிளிநொச்சி பங்கு இளையோரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம்
கிளிநொச்சி பங்கு இளையோரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித திரேசாள் மறைப்பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் 35க்கும் அதிகமான குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.
ஊர்காவற்துறை பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு
ஊர்காவற்துறை பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 1ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஊர்காவற்துறை புனித மரியன்னை ஆலயத்தில் அந்தோனியார் கல்லூரி அதிபர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற…
மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலய வருடாந்த திருவிழா
மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 1ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தநிலையில் சிறார்களுக்கான முதல்தன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 30ஆம்…
கிளிநொச்சி ஆனைவிழுந்தான் திரு இருதய ஆண்டவர் ஆலய வருடாந்த திருவிழா
கிளிநொச்சி அக்கராயன் பங்கின் ஆனைவிழுந்தான் திரு இருதய ஆண்டவர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சேகர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.…
மணல்காடு பொற்பதி புனித இராயப்பர்ஆலய வருடாந்த திருவிழா
மணல்காடு பொற்பதி புனித இராயப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 1ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தநிலையில் 31ஆம் திகதி திங்கட்கிழமை…