ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்
யாழ். மறைமாவட்ட குருவும் பலாலி முன்னாள் பங்குத்தந்தையுமான அருட்தந்தை எரோனியஸ் அவர்களின் அன்புத்தாயார் கென்றி மரிய கார்மலா அவர்கள் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.
வடக்கு கிழக்கு ஆயர் மன்றக் கூட்டம்
யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மறைமாவட்டங்களின் ஆயர்களும், குருமுதல்வர்களும் அடங்கிய வடக்கு கிழக்கு ஆயர் மன்றக் கூட்டம் 17ஆம் திகதி கடந்த புதன்கிழமை வவுனியா திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் மறைமாவட்டங்களை இணைத்து முன்னெடுக்கக்கூடிய செயற்பாடுகள் பற்றி…
யாழ் மறைமாவட்ட அகவொளி குடும்ப நல நிலைய திருமண சேவை
யாழ் மறைமாவட்ட அகவொளி குடும்ப நல நிலையத்தால் திருமண பந்தத்தில் இணையவுள்ளோருக்கான திருமண சேவையொன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அகவொளி நிலைய இயக்குனர் அருட்தந்தை டேவிட் அவர்கள் தெரிவித்துள்ளார். திருமணத்திற்காக காத்திருப்பவர்கள் தங்களுக்கான தகுந்த வாழ்கைத்துணையை தேடுவதற்கு களம் அமைத்துக்கொடுப்பதை நோக்காக…
யாழ்ப்பாண மாவட்ட சக வாழ்வு அமைப்பின் ஆலோசனை குழு அங்கத்தவராக யாழ். மறைமாவட்ட குருமுதல்வர்
யாழ்ப்பாண மாவட்ட சக வாழ்வு அமைப்பின் ஆலோசனை குழு அங்கத்தவராக யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் நீதி, மற்றும் சிறைச்சாலை விவகாரம், யாப்பு சீர்திருத்தங்கள் அமைச்சின் அமைச்சர் கௌரவ விஜயதாச ராஜபக்ச அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிகழ்வு கௌரவ விஜயதாச…
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான விஜயம்
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக, கச்சதீவின் தற்போதைய நிலைமைகள் குறித்து கண்டறிவதற்காக விசேட குழுவொன்று 16ஆம் திகதி கடந்த செவ்வாய்கிழமை…