நெடுந்தீவு புனித யாகப்பர் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை
நெடுந்தீவு புனித யாகப்பர் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 12 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.
பெரிய கல்லாறு புனித அருளானந்தர் ஆலய வருடாந்த திருவிழா
மட்டக்களப்பு மறைமாவட்டம் பெரிய கல்லாறு புனித அருளானந்தர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் டெறன்ஸ் றாகல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில்…
குருநகர் புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா
குருநகர் புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 25ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. கடந்த 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 24ஆம் திகதி புதன்கிழமை நற்கருணைவிழா…
அசிசிபுரம் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா
இளவாலை அசிசிபுரம் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை ஞானரூபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது. கடந்த 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 20ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…
வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளின் பணித்தள திறப்புவிழா
இந்தியாவிலிருந்து வருகைதந்து மன்னார் வங்காலை பங்கில் பணியாற்றும் வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளின் தற்காலிக பணித்தள திறப்புவிழா 21ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றது. வங்காலை பங்குத்தந்தை அருட்தந்தை லகோன்ஸ் பிகுறாடோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…
