வழிகாட்டல் செயலமர்வுகள்

யாழ். மறைக்கல்வி நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்ட கா.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வுகள் கடந்த 11ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றன. மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்செயலமர்வுகள்…

அன்பிய ஊக்குவிப்பாளருக்கான கருத்தமர்வு

யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் முன்னெடுக்கப்பட்ட அன்பிய ஊக்குவிப்பாளருக்கான கருத்தமர்வு கடந்த 11ஆம் திகதி வியாழக்கிழமை ஆலய வளாகத்தில் அமைந்துள்ள ஆயர் யஸ்ரின் மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைக்கோட்ட அன்பிய இயக்குநர்…

திறந்த சமூக நாடகப்போட்டி

நல்லூர் தெற்கு சனசமூக நிலையத்தின் பவள விழாவை முன்னிட்டு அகில இலங்கை ரீதியில் முன்னெடுக்கப்பட்ட திறந்த சமூக நாடகப்போட்டி கடந்த 11ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய குருநகர் பங்கு மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டதுடன் சிறந்த நடிகருக்கான விருதை செல்வன்…

மரதன் ஓட்டப்போட்டி

யாழ். மெய்வல்லுனர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி கடந்த 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியை சேர்ந்த மாணவன் செல்வன் பிரமீதன் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

பெனு அன்னை புனித நீர் ஊற்றை நோக்கிய தமிழர் திருயாத்திரை

நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க பணியகம் முன்னெடுக்கும் மருதமடு அன்னை குடியிருக்கும் பெனு அன்னை புனித நீர் ஊற்றை நோக்கிய தமிழர் திருயாத்திரை வருகிற மாதம் 10,11ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதென நெதர்லாந்து ஆன்மீக பணியகத்தினர் தெரிவித்துள்ளனர். 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை சிறப்பு…