ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை வேளாங்கன்னி அன்னை ஆலய திருவிழா
ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள வேளாங்கன்னி அன்னை ஆலய வருடாந்த திருவிழா வைத்தியசாலை ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 13ஆம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம்…
அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபை பிள்ளைகள் விழா
அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபையின் யாழ் பிராந்திய சமயக் கல்விக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பிள்ளைகள் விழா அருட்பணியாளர் சுதாஜினி அவர்களின் தலைமையில் கடந்த 17ஆம் திகதி வியாழக்கிழமை சாவகச்சேரி, டிறிபேக் கல்லூரியில் நடைபெற்றது. யாழ் பிராந்தியத்தில் இயங்கும்; திருச்சபைகள் கலந்து…
பழைய மாணவர்களின் ஒன்றுகூடல்
இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட 1993ஆம் ஆண்டு உயர்தரப்பிரிவு பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் கடந்த வாரம் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும், மகிழ்வூட்டல நிகழ்வுகளும் இடம்பெற்றன.
ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்
போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபையை சேர்ந்த அருட்சகோதரி கசிமீர் சூசைப்பிள்ளை அவர்கள் கடந்த 17ஆம் திகதி வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் 1955ஆம் தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 69ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து பல இடங்களிலும் பணியாற்றியுள்ளார். இவரின்…
இலங்கை ஜனாதிபதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்கு மலரஞ்சலி
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் 2019ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்களை, நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் ஆலயத்தில் சந்தித்து கலந்துரையாடி உயிரிழந்தோரின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார். கடந்த 09ஆம் திகதி…
