Category: What’s New

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

திருவுள பணியாளர் சபையின் ஆரம்பகால மூத்த உறுப்பினரும் முன்னாள் மறையாசிரியருமான அருட்சகோதரர் அந்தோனி மருசலின் அவர்கள் ஆவணி மாதம் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார். இவர் 1970ஆம் ஆண்டு தனது முதலாவது வாக்குத்தத்தத்தை சபையில் நிறைவேற்றி 1982ஆம் சபையின் நிரந்த…

வடக்கு கிழக்கு ஆயர் மன்றக்கூட்டம்

யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மறைமாவட்டங்களின் ஆயர்களும், குருமுதல்வர்களும் அடங்கிய வடக்கு கிழக்கு ஆயர் மன்றக்கூட்டம் ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை வவுனியா இறம்பைகுளம் திருக்குடும்ப கன்னியர் மட மண்டபத்தில் நடைபெற்றது. திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…

கனியமண் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு எதிரான

மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் கனியமண் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக மன்னார் பிரஜைகள் குழு, பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கவனயீர்ப்பு பேராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். மன்னார் பிரஜைகள் குழு…

மன்னார் மடுத்திருத்தல ஆவணிமாத திருவிழா

மன்னார் மடுத்திருத்தல ஆவணிமாத திருவிழா பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 6ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 14ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை…

குவனேலியன்ஸ் சபை அருட்தந்தையர்களின் பணித்தளத்திற்கான அடிக்கல்

இந்தியாவிலிருந்து வருகைதந்து யாழ். மறைமாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குறைந்த பிள்ளைகளுக்கான பணிகளை ஆரம்பிக்கவுள்ள அன்பின் பணியாளர்கள் குவனேலியன்ஸ் சபை அருட்தந்தையர்களின் பணித்தளத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கிளிநொச்சி விவேகானந்தநகரில் அமையவுள்ள இப்பணித்தளத்திற்கான…