Category: What’s New

யாழ். புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலை கல்லறைகளுக்குரிய சான்றுப்பத்திர புதுப்பித்தல் நடவடிக்கை

யாழ். புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலை கல்லறைகளுக்குரிய சான்றுப்பத்திரம் வைத்திருப்போர் தங்கள் பதிவுகளை புதுப்பித்துக்கொள்ளும்படி யாழ். புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலை நிர்வாகியும் பேராலய பங்குத்தந்தையுமான அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார். சேமக்காலையில் பெரும் எண்ணிக்கையிலான கல்லறைகள் பல வருடங்களாக…

ஆயருடனான சந்திப்பு

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் கடந்த 12ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பில் நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல வருடாந்த திருவிழாவிற்கான முன்னாயத்த கூட்டம்

தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல வருடாந்த திருவிழா எதிர்வரும் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக திருவிழாவிற்கான முன்னாயத்த கூட்டம் 11ஆம் திகதி புதன்கிழமை வேலனை தெற்கு பிரதேச செயலகத்தில்…

கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர்குருத்துவ கல்லூரி புகுமுகப் ஆங்கிலப் பரீட்சை

கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர்குருத்துவ கல்லூரியின் 2024ஆம் கல்வி ஆண்டுக்கான புகுமுகப் ஆங்கிலப் பரீட்சை கடந்த மாதம் 23,24ஆம் திகதிகளில் நடைபெற்றது. இப்பரீட்சைக்கு யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமடத்திலிருந்து ஏழு மாணவர்கள் தோற்றியதுடன் அவர்கள் அனைவரும் சித்தியடைந்து களுத்துறை…

தேசிய மறையாசிரியர் தேர்வு

தேசிய மறைக்கல்வி நிலையத்தால் முன்னெடுக்கப்படும் தேசிய மறையாசிரியர் தேர்வு 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாளைய தினம் நடைபெறவுள்ளதென யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்கள் தெரிவித்துள்ளார். முதலாம் இரண்டாம் மூன்றாம் பிரிவுகளை உள்ளடக்கி நடைபெறவுள்ள இத்தேர்வுக்கு…