Category: What’s New

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபையை சேர்ந்த அருட்சகோதரி பெனடிக்ரா மரியாம்பிள்ளை அவர்கள் 16ஆம் திகதி கடந்த சனிக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் 1964ஆம் தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 60 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து பல இடங்களிலும் பணியாற்றியுள்ளார்.…

குருநகர் புனித யாகப்பர் ஆலய குண்டுதாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 31ஆம் ஆண்டு நினைவுதினம்

குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தின் மீது இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுதாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 31ஆம் ஆண்டு நினைவுதினம் 13ஆம் திகதி கடந்த புதன்கிழமை உணர்வுபூர்வமாக அங்கு அனுஸ்டிக்கப்பட்டது. இந்நாளில் பலியானவர்களை நினைவுகூர்ந்து அருட்தந்தை கனிசியஸ் ராஜ் அவர்களின் தலைமையில் புனித…

இலங்கை நாட்டின் 10வது பாராளுமன்ற தேர்தல்

இலங்கை நாட்டின் 10வது பாராளுமன்ற தேர்தல் கடந்த 14ஆம் திகதி வியாழக்கிழமை மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. இலங்கையின் 22 தேர்தல் மாவட்டங்களில் இடம்பெற்ற இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தேசிய பட்டியல் மூலம் கிடைத்துள்ள 18ஆசனங்கள் உள்ளடங்கலாக 159…

யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட வருடாந்த திருவிழாவும் திறப்பு விழாவும்

யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட வருடாந்த திருவிழாவும் புனரமைப்பு செய்யப்பட்ட குருமட திறப்பு விழாவும் கடந்த 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்றன. கொடியோற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…

“மாறிய எனது பாதை மாற்றியவர் யாரோ” நூல் அறிமுக நிகழ்வு

அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் “மாறிய எனது பாதை மாற்றியவர் யாரோ” நூல் அறிமுக நிகழ்வு 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்றைய தினம் யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தையும் மாங்குளம்…