Category: What’s New

மிருசுவில் புனித நீக்கிலார் ஆலய திருவிழா

மிருசுவில் புனித நீக்கிலார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 06ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த மாதம் 27ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 05ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி ஒளிவிழா

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த மாதம் 20ஆம் திகதி புதன்கிழமை கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளுடன் ஒளிவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும்…

மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வு

யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வு 07ஆம் திகதி கடந்த சனிக்கிழமை உடையார்கட்டு புனித யூதா ததேயு ஆலயத்தில் நடைபெற்றது. உடையார்கட்டு பங்குத்தந்தை அருட்தந்தை அல்வின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கல்வி நிலைய இயக்குநர்…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அருள் சுதர்சன் அவர்களின் அன்புத்தாயார் திருமதி சிலுவைராசா திரேசம்மா அவர்கள் கடந்த 05ஆம் திகதி வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். அருட்தந்தை அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

யாழ். மறைமாவட்ட ஆயரின் திருவருகைக்கால சுற்றுமடல்

மீட்பராம் இயேசுக்கிறிஸ்துவின் வருகைக்கு எம்மைத் தயார்படுத்தும் இப்புனித காலத்தில் ஆன்மீகப் புதுப்பித்தலோடு, திருஅவையுடன் இணைந்து நம்பிக்கையின் திருப்பயணிகளாக பயணிக்க ஒன்றிணைவோமென யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் வெளியிட்டுள்ள திருவருகைக்கால சுற்றுமடலில் அழைப்பு விடுத்துள்ளார். ‘‘நம்பிக்கையின் திருப்பயணிகள்” எனும்…