Category: What’s New

Fengal புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி வழங்கும் செயற்பாடு

Fengal புயலால் உருவான வெள்ள அனர்த்ததினால் பல இடங்களிலும் ஏராளமான மக்கள் பாதிப்புக்குள்ளான நிலையில் அவர்களுக்கான உதவி வழங்கும் செயற்பாடுகள் பலராலும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த 3ஆம் திகதி சாவகச்சோரி பிரதேசத்தில் பாதிக்கப்பட்டிருந்த ஒருதொகுதி மக்களுக்கான இரண்டு வேளை சமைத்த உணவு…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஒளிவிழா

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கலாசாலை அதிபர் திரு. லலீசன் அவர்களின் தலைமையில் கடந்த 04ஆம் திகதி புதன்கிழமை றதிலக்ஸ்மி மண்டபத்தில் நடைபெற்றது. கலாசாலை கிறிஸ்தவ மன்றத்தின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து கலைநிகழ்வுகளும் ஒளிவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற…

குளமங்கால் புனித சவேரியார் ஆலய திருவிழா

குளமங்கால் புனித சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 03ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கடந்த மாதம் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 02ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

கத்தோலிக்க திருமறைத்தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீட்டுப்பணி

யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் பாடசாலை ரீதியாக முன்னெடுக்கப்பட்ட கத்தோலிக்க திருமறைத்தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீட்டுப்பணி ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்து. மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த மாதம் 25ஆம் திகதி யாழ். மறைக்கல்வி நிலையத்தில் ஆரம்பமாகி…

திருநெல்வேலி புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழா

திருநெல்வேலி புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கடந்த மாதம் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 02ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா…