Category: What’s New

Combined Carol பாடல் நிகழ்வு

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ பாடசாலைகள் இணைந்து முன்னெடுத்த 71ஆவது Combined Carol பாடல் நிகழ்வு கடந்த 09ஆம் திகதி சனிக்கிழமை யாழ். புனித பரியோவான் கல்லூரியில் நடைபெற்றது. வட மாகாணத்தை சேர்ந்த ஏஞ்சல் சர்வதேச பாடசாலை, சுண்டுக்குளி பெண்கள் கல்லூரி, வட்டுக்கோட்டை…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

மட்டக்களப்பு மறைமாவட்ட குருவாகிய அருட்தந்தை திருச்செல்வம் அவர்கள் 13ஆம் திகதி கடந்த புதன்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். 2000ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர் யுத்தகால சூழலில் ஆயித்தமலை மற்றும் புல்லுமலை திருத்தலப் பங்குகளின் பங்குத்தந்தையாகவும், நிர்வாகியாகவும் பொறுப்பேற்று இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில்…

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம்

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம் இரண்டு பிரிவுகளாக முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் முதலாம் குழுவினருக்கான தியானம் கடந்த 04ஆம் திகதி தொடக்கம் 08ஆம் திகதி வரை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை தியான இல்லத்தில் நடைபெற்றது. இயேசு சபையை சேர்ந்த அருட்தந்தை…

“மக்களின் நிலத்துடனான உறவு” கலைப்படைப்புகளின் காட்சிப்படுத்தல்

இலங்கை நவீன மற்றும் சமகால கலைக்கான அருங்காட்சியகத்தினால் முன்னெடுக்கப்பட்ட “மக்களின் நிலத்துடனான உறவு” கலைப்படைப்புகளின் காட்சிப்படுத்தல் கடந்த 06ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணம் கண்டி வீதியில் அமைந்துள்ள கலம் பண்பாடுகளின் சந்திப்பு வெளியில் இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிலப்பிரச்சினைகளை மையப்படுத்திய…

கத்தோலிக்க திருமறைத்தேர்வு

யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தால் பாடசாலை மாணவர்களுக்கிடையே வருடாந்தம் முன்னெடுக்கப்படும் கத்தோலிக்க திருமறைத்தேர்வு 09ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. யாழ். மறைமாவட்டத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தெரிவுசெய்யப்பட்ட 276 பாடசாலைகளில் இடம்பெற்ற இப்பரீட்சையில் 13,000ற்கும் அதிகமான மாணவர்கள் தோற்றியிருந்தனர்.