Author: admin

‘நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் தமிழ், சமய, சமுகப்பணிகள்’ நூல் வெளியீடு

கலாநிதி புஸ்பா கிறிஸ்ரி அவர்களின் ‘நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் தமிழ், சமய, சமுகப்பணிகள்’ நூல் வெளியீடு ஐப்பசி மாதம் 30ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. திருமறைக்கலாமன்ற பிரதி இயக்குநர் திரு. ஜோன்சன்…

சுண்டுக்குளி பங்கில் செபமாலை பேரணியும் அன்னையின் திருச்சொருப பவனியும்

வணக்கமாத நிறைவை முன்னிட்டு சுண்டுக்குளி பங்கில் முன்னெடுக்கப்பட்ட செபமாலை பேரணியும் அன்னையின் திருச்சொருப பவனியும் ஐப்பசி மாதம் 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பேரணி புனித யுவானியார் ஆலயத்தில் ஆரம்பமாகி புனித திரேசாள்…

2026ஆம் ஆண்டு திருவிவிலிய நாட்குறிப்பேடு

யாழ். மறைமாவட்ட பாதுகாவலன் வெளியீடான 2026ஆம் ஆண்டு திருவிவிலிய நாட்குறிப்பேடு வெளிவரவுள்ளது. திருப்பாடல்களுடன் இணைந்து பாதுகாவலன் திருவிவிலிய நாட்குறிப்பேடு எனும் பெயரில் இவ்வாரம் வெளிவரவுள்ள இக்குறிப்பேட்டினை பங்குத்தந்தையர்கள் ஊடாக புனித வளன் அச்சகத்தில் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பிரதியொன்றின் விலை 600 ரூபா…

கலையருவி சமுகத்தொடர்பு அருட்பணி மைய யூபிலி ஆண்டு நிகழ்வும், கவின்கலை பாடசாலையின் சான்றிதழ் வழங்கும் வைபவமும்

மன்னார் மறைமாவட்ட கலையருவி சமுகத்தொடர்பு அருட்பணி மையத்தின் யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வும், கவின்கலை பாடசாலையின் சான்றிதழ் வழங்கும் வைபவமும் ஐப்பசி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கலையருவி மண்டபத்தில் இடம்பெற்றது. கலையருவி இயக்குநர் அருட்தந்தை லக்ஸ்ரன் டி சில்வா அவர்களின்…

நாவிதன்வெளி 4ஆம் கொளனி புனித சின்ன மடுமாதா ஆலய திருவிழா

மட்டக்களப்பு மறைமாவட்டம் திருச்சிலுவை திருத்தல துணைப்பங்கான அம்பாறை நாவிதன்வெளி 4ஆம் கொளனி புனித சின்ன மடுமாதா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை ஜுனோ சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஐப்பசி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அன்றைய தினம் காலை திருச்சிலுவை…