தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல அன்பியவிழா

தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட அன்பியவிழா யூன் மாதம் 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிபாலகர் அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது. வெண்புரவிநகர் புனித அந்தோனியார் ஆலயம் மற்றும் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலம்…

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் தன்னார்வ இரத்ததான முகாம்

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் 175ஆவது ஆண்டு நிறைவை சிறப்பித்து முன்னெடுக்கப்பட்ட தன்னார்வ இரத்ததான முகாம் 19ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் ‘உதிரம் கொடுத்து இன்னுயிர் காப்போம்’ எனும் கருப்பொருளில்…

அடம்பன் பிரதேச சிரேஸ்ர பிரஜைகள் சங்க மூதாளர் குழு கள அனுபவ பயணம்

மன்னார் மாவட்ட அடம்பன் பிரதேச சிரேஸ்ர பிரஜைகள் சங்க மூதாளர் குழுவினரால் முன்னெடுக்கபட்ட யாழ். மாவட்டத்தை நோக்கிய கள அனுபவ பயணம் 20ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மூதாளர் குழு தலைவர் திரு. அருள் யேசுதாசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…

சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலய இரத்ததான முகாம்

சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் யூன் மாதம் 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் தலைமையில் ‘உயிர் காக்க உதிரம் கொடுப்போம்’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இவ்…

சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை

சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு யூன் மாதம் 21ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 06 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.