டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மன்னார் மக்களுக்கு யாழ். மறைமாவட்ட புனித வின்சன்ட் டி போல் சபை உதவி
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மன்னார் மக்களுக்கு யாழ். மறைமாவட்ட புனித வின்சன்ட் டி போல் சபையினரால் ஒரு தொகுதி உதவிப்பொருட்கள் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை வழங்கிவைக்கப்பட்டுள்ளன. யாழ். மறைமாவட்ட புனித வின்சன்ட் டி போல் சபை பந்திகள் மூலம் சேகரிக்கப்பட்ட இவ்…
2025 யூபிலி ஆண்டு நிறைவு
2025 யூபிலி ஆண்டு யாழ். மறைமாவட்ட தலத்திரு அவைகளில் மார்கழி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருக்குடும்ப பெருவிழாவுடன் நிறைவுக்கு கொண்டுவரப்படவுள்ளதென யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் மறைமாவட்ட…
மல்வம் பங்கில் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் பிறப்பின் முப்பொன் விழா சிறப்பு நிகழ்வு
மல்வம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் பிறப்பின் முப்பொன் விழா சிறப்பு நிகழ்வு மார்கழி மாதம் 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மல்வம் திருக்குடும்ப ஆலய ஞானப்பிரகாசர் கலையரங்கில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இளவாலை மறைக்கோட்ட…
யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க சட்டவாளர்களுக்கான சிறப்பு ஒன்றுகூடல்
யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க சட்டவாளர்களுக்கான சிறப்பு ஒன்றுகூடல் மார்கழி மாதம் 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குனர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைக்கோட்ட முதல்வர்…
அருட்தந்தை லெபோன் சுதன் அவர்கள் வட மாகாண கல்வித்திணைக்கள கிறிஸ்தவ பாட உதவிக்கல்வி பணிப்பாளராக நியமனம்
இலங்கை கல்வித்துறை உயர் நிலையான, கல்வி நிர்வாக சேவையின் 2023ஆண்டு போட்டிப் பரீட்சையிலும் நேர்முக தேர்விலும் வெற்றிபெற்று கல்வி நிர்வாக சேவைக்குள் உள்ளவாங்கப்பட்ட அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை லெபோன் சுதன் அவர்கள் வட மாகாண கல்வித்திணைக்கள கிறிஸ்தவ பாட உதவிக்கல்வி பணிப்பாளராக…
