இலங்கை வின்சென்ட் டி போல் தேசிய சபை வருடாந்த பொதுக்கூட்டம் நவம்பர் மாதம் 14ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு கொள்ளுப்பிட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.

சபை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை யூட்ராஜ் அவர்களின் வழிநடத்தலில் சபை தலைவர் சகோதரர் ராஜ் அழகக்கோன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய வின்சென்ட் டி போல் சபைக்கு பொறுப்பான ஆயர் பேரருட்தந்தை மக்ஸ்வெல் டி சில்வா அவர்களின் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வின்சென்ட் டி போல் சபை நியூசிலாந்து நாட்டு ஒருங்கிணைப்பாளர் திரு. ஆர்தர் லூட்ஸ் அவர்கள் கலந்துகொண்டதுடன் யாழ். மறைமாவட்டத்திலிருந்து வின்சென்ட் டி போல் சபை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் தலைமையில் உறுப்பினர்களும் பங்குபற்றியிருந்தனர்.

By admin