உடையார்கட்டு பங்கின் பங்குத்தந்தையாக யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்களால் நியமனம்பெற்ற அருட்தந்தை நேசநாயகம் அவர்கள் தனது பணிப்பொறுபை ஏற்றுக்கொண்டார்.
நவம்பர் மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உடையார்கட்டு புனித யூதாததேயு ஆலயத்தில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்களின் முன்னிலையில் பணிப்பொறுப்போற்கும் நிகழ்வு நடைபெற்றது.

