அளம்பில் புனித அந்தோனியார் ஆலய பாடகர் குழாமினர் இணைந்து முன்னெடுத்த புனித சிசிலியா திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை எமில் போல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நவம்பர் மாதம் 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை பங்குத்தந்தை அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருப்பலி நிறைவில் பாடகர் குழாமினருக்கான ஒன்றுகூடல் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் அருட்சகோதரி டிவானா மற்றும் ஆலய பக்திச்சபை பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

