இலங்கைக்கான ஜேர்மன் கோத்தே நிறுவனத்திற்கும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் இடையிலான PASCH கூட்டாண்மை ஒப்பந்தம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் மொழிக் கல்வியை மேம்படுத்துவதையும், கலாசாரங்களுக்கு இடையிலான பரிமாற்றத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட இக்கூட்டாண்மை ஒப்பந்தத்தில், இலங்கைக்கான கோத்தே நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. ஸ்டீபன் விங்லர் மற்றும் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் அதிபர் அருட்தந்தை பீற்றர் திருமகன் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

இவ் ஒப்பந்தப் புதுப்பிப்பு, மாணவர்களிடையே ஜேர்மன் மொழிக் கல்வியை மேலும் வலுப்படுத்துவதுடன், இளைய தலைமுறையினருக்குப் புதிய கல்வி வாய்ப்புகளையும் சர்வதேசக் கலாசாரப் பரிமாற்ற அனுபவங்களையும் உருவாக்குவதற்கான மற்றுமொரு முக்கிய படியாக அமைந்துள்ளது.

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி, இலங்கையில் ஜேர்மன் மொழிக் கல்வியை அறிமுகப்படுத்திய முதல் தமிழ் பாடசாலை என்பதுடன், இங்கு கடந்த 11 ஆண்டுகளாக ஜேர்மன் மொழிக்கல்வி தொடர்ச்சியாக கற்பிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

By admin