யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம் இரண்டு பிரிவுகளாக முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் முதலாம் குழுவினருக்கான தியானம் நவம்பர் மாதம் 16ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரை பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் நடைபெற்றது.
இந்தியா கோட்டாறு மறைமாவட்டத்தைச் சேர்ந்த கத்தோலிக்க இறையியலாளர் அருட்தந்தை அல்போன்சு தேவசகாயம் அவர்கள் நெறிப்படுத்திய இத்தியானத்தில் தியான உரைகள், சிறப்பு நற்கருணை ஆராதனைகள், திருப்பலிகள் என்பன இடம்பெற்றன.
இத்தியானத்தில் 60 வரையான குருக்கள் பங்குபற்றியிருந்தனர்.

