பெல்ஜியம் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இறந்த விசுவாசிகளுக்கான சிறப்புத்திருப்பலி நவம்பர் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பணியக இயக்குநர் அருட்தந்தை ஆபிரகாம் அவர்களின் தலைமையில் அன்ற்வெர்ப்பன் நகர் புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் இடம்பெற்ற இத்திருப்பலியில் 80ற்கும் அதிகமான இறைமக்கள் கலந்து செபித்தனர்.

