இறையழைத்தலை ஊக்குவிக்கும் முகமாக மட்டக்களப்பு மறைமாவட்டம் புனித யோசேப்பு சிறிய குருமடத்தில் முன்னெடுக்கப்பட்ட “வந்து பாருங்கள்” இறையழைத்தல் நிகழ்வு நவம்பர் மாதம் 07,08ஆம் திகதிகளில் நடைபெற்றது.

குருமட அதிபர் அருட்தந்தை சுகந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலி, திருச்செபமாலை, ஆன்மீக உரைகள், கருத்துரைகள், குழு கலந்துரையாடல், மகிழ்வூட்டல் நிகழ்வுகள், தீப்பாசறை என்பன இடம்பெற்றன.

மட்டக்களப்பு மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோர்ஜ் ஜீவராஜ் அவர்கள் ‘விவிலியத்தில் இறைவனின் அழைப்பு’ எனும் தலைப்பிலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மருத்துவ அதிகாரி ரமாஜினி துஸ்யந்தன் அவர்கள் ‘நடத்தைப் பண்புகளும் ஆரோக்கியத்தின் முக்கியத்துவமும்’ என்னும் தலைப்பிலும் கருத்துரைகளையும் குருமட ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை மொறாயஸ் அவர்கள் ‘குருமட மாணவர்களிடம் காணப்பட வேண்டிய முக்கிய பண்புகள்’ என்னும் தலைப்பிலும் அருட்தந்தை யூட் டிலக்ஸன் அவர்கள் ‘ஆன்மீக முதிர்ச்சி’ என்னும் தலைப்பிலும் ஆன்மீக உரைகளையும் வழங்கினர்.

இந்நிகழ்வில் 35 மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin