மதங்களுக்கிடையிலான நல்லுறவையும் பரஸ்பர புரிந்துணர்வையும் மேம்படுத்தும் நோக்கில் மியன்மார் நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த ஆயர்கள் மற்றும் பௌத்த குருமார், பல்வேறு தரப்பினருடனான கலந்துரையாடல்கள் மற்றும் கள அனுபவப் பகிர்வுகளை முன்னெடுத்திருந்தனர்.
ஒக்டோபர் 30,31 நவம்பர் 01 ஆகிய தினங்களில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்சமய சமூகமட்ட குழுக்கள், குருக்கள், துறவிகள் மற்றும் யாழ். மறைமாவட்ட ஆயர் ஆகியோருடன் சந்திப்புக்களை மேற்கொண்டு யுத்தம் அதற்கு பின் நடைபெற்ற நிகழ்வுகளை கேட்டறிந்ததுடன் மியன்மார் நாட்டில் தாம் எதிர்கொள்ளும் நெருக்கடி நிலமைகளையும் பகிர்ந்துகொண்டனர்.
இதன் ஒரு பகுதியாக, நவம்பர் மாதம் 01ஆம் திகதி, கடந்த ஞாயிற்றுக்கிழமை, யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தைத் தரிசித்த அவர்கள், அங்கு நடைபெற்ற திருப்பலியிலும் பங்கேற்றனர்.
திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

