திருகோணமலை மறைமாவட்டம் இருதயபுர பங்கின் சோமபுரம் புனித யூதாததேயு ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
23ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் வழிபாடுகள் ஆரம்பமாகி 24ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை இயேசு சபை அருட்தந்தை லூசன் எமில் சுசந்த அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

